தொகுப்பு

Archive for the ‘தத்துவம்’ Category

கொடுப்பதும் கெடுப்பதும்

helping-hand

 

 

கொடுத்து கொடுத்து – வாழ்!
கொடுத்து கெடுத்து – வீண்!
கெடுத்து கொடுத்து – பாழ்!
கெடுத்து கெடுத்து – ஏனோ ?

பிடித்ததும் கிடைத்ததும்

பெப்ரவரி 18, 2008 ச.தனா 1 comment

பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது

கிடைத்தபின் பிடிப்பதில்லை.

கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது

பிடித்தபின் நிலைப்பதில்லை!!!

see saw

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது

நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.

நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்

நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!

Read more…

நம் மனசாட்சி

வெள்ளை வீடு

பூட்டிக் கிடக்கும் வெள்ளை வீடு – நம் மனசாட்சி.

இந்த பூட்டின் சாவி நம் கையில் இருக்க,

நாமோ அந்த வீட்டையே

துளைத்துவிட்டு தேடுகின்றோம்!!!

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

நவம்பர் 21, 2007 ச.தனா மறுமொழியவும்

ninaipathellam

நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …

நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …

பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …

நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …

நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …

அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.

பொய்யில் உண்மை – உண்மையில் பொய்

பொய்

பொய்யே பொய்யாகிவிடும்,
சிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.

உண்மையும் பொய்யாகிவிடும்,
கடுகளவும் பொய் இருந்து விட்டால்.

இது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய்

சுயனலம்

செப்டம்பர் 8, 2007 ச.தனா 1 comment

selfish

என் நலம் பாத்து

நம் நலம் சேர்த்து

நான் செய்தது

சுயனலம் ஆகுமா?

அது பொது நலம் இல்லா விட்டாலும்

பொதுவான நலம் அல்லவா?

வாழ்க்கைப் பாடம்

lesson

வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில்

நாம் அனுபவப்பாடம் பயின்று வருகிறோம்

Read more…

தேடல் முடிந்தது

search  completed

காதலின் தேடல் இளமையில்…

அன்பின் தேடல் முதுமையில்…

வாழ்கையின் தேடல் எளிமையில்…

பதவியின் தேடல் தலைமையில்…

இன்பத்தின் தேடல் பன்மையில்…

துன்பத்தின் தேடல் பொருமையில்…

சந்தோஷத்தின் தேடல் பெருமையில்…

கோபத்தின் தேடல் வன்மையில்…

வெற்றியின் தேடல் வலிமையில்…

தோல்வியின் தேடல் வெறுமையில்…

உண்மையின் தேடல் பொய்மையில்…

பொய்யான தேடல் உண்மையில்… …முடிந்தது

சுதந்திரம் என்பது …

freedom

சுதந்திரம் என்பது ஒற்றுமை உணற்வு

- பறிக்கப்படும் வரை!!!

கொடுமை…

இளமையில் பசித்திருப்பது

முதுமையில் தனித்திருப்பது

……………

……………

காதலித்தும் சொல்லாமல் தவித்திருப்பது