அந்த ஆண்டவனும் ஊனம் தான்

என் பிராத்தனைகளை அவன் கேட்பதை,
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், காது கேளாதவன்.
என் கேள்விகளுகெல்லாம் அவன்
அமைதியாய் சொல்லும் பதில்களை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், வாய் பேச முடியாதவன்.
என் செயல்களில் உள்ள நல்ல வற்றை
அவன் பார்ப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், பார்வை அற்றவன்.
என் பிரச்சனைகளை தீர்த்துவெய்க்க
ஒவ்வொறு முறையும் அவன் கைகோடுப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், கைகள் இல்லாதவன்.
என் தனிமையான பயணங்களில் என் தோழனாய்
என்னுடன் அவன் நடப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், கால்கள் இல்லாதவன்.
நாம் உணராவிட்டால், அந்த ஆண்டவனே ஊணமாகிவிடுகிறான்!!!
நம் ஊணமுற்ற நண்பர்களின் கெதி?
ஆதரிப்போம் நம் உணர்வுகளால்!!!





அண்மைய மறுமொழிகள்