தொகுப்பு

Archive for the ‘எதார்த்தம்’ Category

தன்னம்பிக்கை

டிசம்பர் 8, 2008 ச.தனா மறுமொழியவும்

self_confidence

தன்னம்பிக்கை இல்லாமல்

பயத்துடன் வாழும் வாழ்க்கையும்,

உயிருடன் கல்லறையில்

உறங்குவதும், ஒன்றே!!!

எது கடினம்?

பெப்ரவரி 21, 2008 ச.தனா 1 comment

கருத்திற்க்கினிய கவிதை எழுதுவதா …

அந்த கவிதைக்கு உணர்வைத் தூண்டும் இசை அமைப்பதா …

இந்த இசைக்கு அந்த கவிதையை பாடலாய் பாடுவதா …

இப்படிப் பட்ட பாடலுக்கு இயல்பாக நடிப்பதா …

இல்லை இவை அனைத்தையும் இயக்குவதா …

எது கடினம்?

director

பகல் கனவு

பெப்ரவரி 10, 2008 ச.தனா 1 comment

day-dreamer(C) ktp

இரவு முழுவதும் விழித்திருந்தேன்

விடியுமென்று.

விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,

நீ வந்து போகும் பகல் கனவு

பலிக்குமென்று!!!

அழகு ஆபத்தானது

செப்டம்பர் 25, 2007 ச.தனா 3 பின்னூட்டங்கள்

azhagu

அழகு ஆபத்தானதுஎன்று செல்கின்றனர்…

அதனால் தானோ அதைக்

கண்டவுடன் நாம்

மயங்குகின்றோம்,

பயத்தில்!!!

அழகு தானே ஆபத்தானது

அழகானவர்கள் இல்லையே ?

பிரிந்த உறவுகள்

செப்டம்பர் 6, 2007 ச.தனா மறுமொழியவும்

முறிந்த உறவுகள் பிரியக் கூடும்

ஆனால்

பிரிந்த உறவுகள் முடிவதில்லை

நினைவுகளால்

தொடந்து கொண்டுதான் இருக்கும்

வாழ்க்கைப் பாடம்

lesson

வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில்

நாம் அனுபவப்பாடம் பயின்று வருகிறோம்

Read more…

கோலங்கள்

rangoli

அழகான கோலம் போடலாம் என்று நினைத்து

என் வாழ்க்கையில் ஒவ்வொறு புள்ளிகளையும்

நான் போடுகிறேன்!!!

ஆண்டவனோ இந்த புள்ளிகளை வெய்த்து

வேறொறு கோலம் போடுகிறான்,

அலங்கோலமாய்!!!

பிரச்சனைகள்

நம் வாழ்க்கையே பிரச்சனையாகிவிடும்,

நமக்கு பிரச்சனைகளே இல்லாமள் போனால்.

பிரச்சனைகள் இருப்பதால் தான்,

தீற்வைத் தேடி நாம் வாழ்ந்து கொன்டு இருக்கிறோம்.

ஊர் பேச்சு

(படித்ததில் பிடித்தது)

பசி மயக்கத்தில், தல்லாடி

நான் நடந்தேன்

என்னைப் பார்த்து ஊர் பேசியது

குடிகாறன் என்று

நீங்களூம் கவிஞன் தான்

நீங்களூம் கவிஞன் தான்

- உங்களுடன்

தனிமையும் வெறுப்பும் சேரும்போது