தொகுப்பு

Archive for the ‘இயற்கை’ Category

பூ வின் மீது நீர்த்துளி

poovin meethu pani thuli

பூ வின் மீது நீர்த்துளி

இதற்க்கு வாடகை கேட்குமா அந்த பூ?

இல்லை தண்ணிர் வரி தான் கட்டுகிறதா!!!

இந்த நீர்த்துளி கொண்ட பூ!

Categories: இயற்கை

மாலைச் சூரியனே…

பெப்ரவரி 26, 2008 ச.தனா மறுமொழியவும்

sunset

மாலைச் சூரியனே…

சென்று வா, இரவை வென்று வா!!!

நீ வெல்லும் போது,

எங்கள் பொழுது விடியும்!

சில சமயம் நீ தோற்கும் போது,

உன்னை மறைக்கும் அந்த

மழை மேகம் கூட கண்ணீர்விடும்!

நிலவின் இளமை ரகசியம்

பெப்ரவரி 16, 2008 ச.தனா 1 comment

முழு நிலவின் இளமை,

அது தேய்வதில் தான்.

நம் மனதின் இளமை,

நாம் தாழ்வதில் தான்!!!

Full Moon
Read more…

நிலவுக்கு தாலாட்டு

அக்டோபர் 22, 2007 ச.தனா மறுமொழியவும்

 நிலவு

நிலவே…

நீ உதித்தவுடன், பாடும்

அமைதியான தாலாட்டை கேட்டு

இந்த உலகமே உறங்குகிறது

நீ மட்டும் விழித்து கொண்டு இருக்கிறாய்!!!

வா…

என் மடியில் வந்து கண் மூடு

நீ உறங்க நான் தாலாட்டு பாடுகிறேன்…

ஏற்காடு

அக்டோபர் 3, 2007 ச.தனா மறுமொழியவும்

ஏர் பூட்டி உழுது,

செழிப்பானதோ

இந்த ஏற்காடு

***

பச்சை மனம் மாறாப்

பிள்ளை போல, இன்றும்

பச்சை நிறம் மாறாக்

காடு, இந்த ஏற்காடு

***

எழைகளின் ஊட்டி,

என்றும்

மாசு படாத ஊட்டி

இந்த ஏற்காடு

மழையின் சங்கீதம்

செப்டம்பர் 12, 2007 ச.தனா 1 comment

மழையே…

சப்தம் இல்லா
தனிமையை விரும்பும்
என்னக்கு
பிடித சப்தம்
உன் சங்கீதம்

நீ பொழியும் போது தான்
எங்கள் தெருக்களும்
வாகனம் இன்றி
அமைதியாகிவிடுகிறது.
அமைதியை கொடுத்தது
உன்ன் சங்கீதம்

தன்னந் தனியாய்
உன்னுடன் நான்
நடக்கும்போது
என் மனதில் எழும்
எண்ணங்களுக்கு எல்லாம்
கைதட்டுவது போல்
என் குடையின் மேல்
உன்ன் சங்கீதம்

பலருக்கு மழையில் நனைந்து மகிழ ஆசை
சிலருக்கு மழையை பார்து ரசிக்க ஆசை
என்னக்கொ மழையை கேட்டு ரசிக்க ஆசை